வேலியே பயிரை மேய்ந்தது: சிறுமியைக் கொன்ற பள்ளி முதல்வர்!
சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதையடுத்து தலைமை ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.


குஜராத்தில் உள்ள பள்ளியில் 6 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதையடுத்து தலைமை ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.
மாநிலத்தின் தாவூத் மாவட்டத்தில், சிங்கவத் தாலுகாவில் உள்ள ஒரு பள்ளியில் 6 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனையில் சிறுமி முச்சுத் திணறி உயிரிழந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், உயிரிழந்த சிறுமியின் தாயார் அன்றைய தினம் பள்ளிக்குத் தலைமை ஆசியர் கோவிந்த் நாத்துடன் சென்றதாகக் கூறினார்.
இதுகுறித்து தலைமை ஆசிரியரிடம் விசாரித்தபோது பள்ளி வளாகத்தில் இறக்கிவிட்டுச் சென்றதாகத் தெரிவித்தார். இதையடுத்து சந்தேகமடைந்த போலீஸார் தலைமை ஆசிரியரிடம் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். தலைமை ஆசிரியர் ஒருகட்டத்தில் உண்மையை ஒப்புக்கொண்டார்.
அவர் அளித்த வாக்குமூலத்தில், தலைமை ஆசிரியர் செப்.19 அன்று சிறுமியை அவரது வீட்டிலிருந்து அழைத்து சென்றுள்ளார். பள்ளிக்குச் செல்லும் வழியில் கோவிந்த் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். சிறுமி கத்தி சப்தம் போட்டதையடுத்து, கழுத்தை நெரித்ததில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பள்ளிக்கு தாமதமாக வந்த தலைமை ஆசிரியர் சிறுமியின் உடலை காரிலேயே வைத்துவிட்டு பள்ளிக்குச் சென்றுள்ளார். மாலை 5 மணியளவில் பள்ளியில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியின் புத்தகப்பை மற்றும் காலணிகளை வகுப்பறையில் போட்டுவிட்டு, சடலத்தைப் பள்ளியின் பின்னால் வீசியதாக அவர் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து கோவிந்த் நாத்தை போலீஸார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...