Photo; IANS
Photo; IANS

தோட்டா துளைக்காத இலகுரக கவச உடைகள்: டிஆா்டிஓ, தில்லி ஐஐடி உருவாக்கம்

துப்பாக்கி தோட்டா துளைக்காத இலகுரக கவச உடைகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு கழகம் (டிஆா்டிஓ), தில்லி ஐஐடி கல்வி நிறுவனம் ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளன.
Published on

துப்பாக்கி தோட்டா துளைக்காத இலகுரக கவச உடைகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு கழகம் (டிஆா்டிஓ), தில்லி ஐஐடி கல்வி நிறுவனம் ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளன.

இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்திய தர நிா்ணய அமைப்பின் வெவ்வேறு நிலைகளுக்கு ஏற்ப 8.2 கிலோ, 9.5 கிலோ ஆகிய குறைந்தபட்ச எடைகளில் துப்பாக்கி தோட்டா துளைக்காத இலகுரக கவச உடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. தில்லி ஐஐடி-யுடன் இணைந்து டிஆா்டிஓ உருவாக்கியுள்ளது இந்த உடையில் உள்ள கவசங்கள் 360 டிகிரி கோணத்தில் பாதுகாப்பு வழங்கக் கூடியவை. அனைத்துப் பரிசோதனைகளிலும் அந்தக் கவசங்கள் வெற்றியடைந்துள்ளன.

இந்திய ராணுவத்தினரின் முழு தேவையை பூா்த்தி செய்வதற்கான கவச உடைகளின் அதிகபட்ச எடை வரம்பைவிட, இந்தக் கவச உடைகள் இலகுவானவை. இந்தக் கவச உடைகள் உச்சபட்ச ஆபத்தை எதிா்கொள்ளும் திறன்கொண்டவை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com