ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்கவில்லையெனில், அரசுக்கு இந்தியா கூட்டணி அழுத்தம் கொடுக்கும் என்று ராகுல் காந்தி எச்சரித்துள்ள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவை நடந்து வரும் நிலையில், ராகுல் காந்தி தலைமையில் ஜே.கே. ரிசார்ட் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடந்து வருகிறது. பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது, ``இந்திய வரலாற்றில் ஒருபோதும் ஒரு மாநிலத்தின் மாநில அந்தஸ்தை பறித்துவிட்டு, அதனை யூனியன் பிரதேசமாக நாங்கள் மாற்றியதில்லை.
மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க பாஜக தவறினால், இந்தியா கூட்டணி மக்களவை, மாநிலங்களவை முதல் வீதிகள் வரையில் இறங்கி, அரசுக்கு அழுத்தம் கொடுக்கும். உள்ளூர் மக்களை ஓரங்கட்டி, லெப்டினன்ட் கவர்னர் மூலம் வெளியாள்களுக்கு பயனளிக்கும் வகையில், மாநில அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் முன்னேற்றத்திற்கு மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பது அவசியம். அது உங்கள் உரிமை; அதுதான் உங்கள் எதிர்காலம்.
நாடு முழுவதும் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை அரசு நடத்துகிறது. உண்மையில், இந்த அரசு இரண்டு தொழிலதிபர்களுக்காக மட்டும்தான் இயங்குகிறது. ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள், இந்த நிறுவனங்களுக்குதான் சாதகமான கருவிகளாக உள்ளன.
அவர்கள் கூறும் மேக் இன் இந்தியா முன்முயற்சியானது, உண்மையில் மேக் இன் அதானி என்றுதான் அழைக்கப்பட வேண்டும். ஏனெனில், பெரும்பாலான ஒப்பந்தங்கள் அதானிக்குதான் வழங்கப்படுகின்றன’’ என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து: பிரதமரிடம் முதல்வா் ரங்கசாமி வலியுறுத்தல்

இது இந்தியா; வட கொரியா அல்ல! -பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம்

விவசாயிகளின் அடித்தளம் இல்லாமல் எதையும் கட்டமைக்க முடியாது: ராகுல்!

திமுக கூட்டணி! கை கொடுக்குமா, காலை வாருமா காங்கிரஸ்?
வீடியோக்கள்

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

