மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

போக்சோ வழக்கில் முன்னாள் பாஜக தலைவர் கைது!

நிரந்தர வேலை அளிப்பதாகக் கூறி, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த முகேஷ் போரா கைது

News image

கோப்புப் படம்

Updated On :25 செப்டம்பர் 2024, 1:27 pm

நிரந்தர வேலை அளிப்பதாகக் கூறி, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பாஜகவின் முன்னாள் தலைவர் முகேஷ் போரா கைது செய்யப்பட்டார்.

உத்தரகண்டில் பாஜக தலைவரும் உத்தரகண்ட் கூட்டுறவு பால் கூட்டமைப்பின் நிர்வாகியுமான முகேஷ் போரா, 36 வயதுடைய பெண்ணுக்கு நிரந்தர வேலை அளிப்பதாகக் கூறி, அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், மகளையும் துன்புறுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, முகேஷ் போரா மீது பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, முகேஷ் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கடந்த சில நாள்களாக தேடி வந்துள்ளனர்.

மேலும் உத்தரப் பிரதேசம், தில்லி, ராஜஸ்தான், பஞ்சாப் முதலான மாநிலங்களிலும் குழுக்களாக பிரிந்து, முகேஷை தேடும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். பால்பண்ணை கூட்டமைப்புக்கு பால் வழங்கும் ஒப்பந்தக்காரர்கள், முகேஷுக்கு உதவுவதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இந்த நிலையில், 23 நாள்களாக தலைமறைவாக இருந்த முகேஷை, உத்தரப் பிரதேசத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும், முகேஷை பாஜக இடைநீக்கம் செய்ததுடன், உத்தரகண்ட் கூட்டுறவு பால் கூட்டமைப்பின் நிர்வாகி பதவியில் இருந்தும் முகேஷ் நீக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.