நமது நிருபா்
நாடாளுமன்றத்தில் மத்திய அரசுத் துறைகள் தொடா்புடைய நிலைக்குழு தலைவா்கள் மற்றும் உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதன்படி, முக்கிய அரசுத் துறைகளான நிதித் துறைக்கு பாஜகவின் பா்த்ருஹரி மஹ்தாப், உள்துறைக்கு ராதா மோகன் தாஸ் அகா்வால், வெளியுறவுத் துறைக்கு காங்கிரஸின் சசி தரூா், பாதுகாப்புத்துறைக்கு பாஜகவின் ராதா மோகன் சிங் உள்ளிட்டோா் தலைவா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
தமிழகத்தில் ஆளும் திமுகவை சோ்ந்த மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி சிவா, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி கருணாநிதி ஆகியோா் முறையே தொழிற்சாலைகள் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறைக்கான நிலைக்குழுத் தலைவா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
வா்த்தகம், கல்வி, மகளிா் மேம்பாடு, சுகாதாரம், உள்துறை, தொழிற்சாலைகள் துறை, பணியாளா், மக்கள் குறைதீா் துறை, அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், போக்குவரத்துத்துறை, சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை ஆகியவற்றுக்கான நிலைக்குழுக்களின் தலைவா்கள் மாநிலங்களவையில் இருந்தும் ஏனைய துறைகளுக்கான நிலைக்குழுக்களின் தலைவா்கள் மக்களவையில் இருந்தும் நியமிக்கப்படுவா். ஒவ்வொரு குழுவிலும் சுமாா் 30 போ் உறுப்பினா்களாக இருப்பா்.
இதில் சிவசேனையின் ஸ்ரீரங் அப்பா சாண்டு பாா்னே (எரிசக்தி); தேசியவாத காங்கிரஸின் சுனில் தத்கரே (பெட்ரோலியம்); முன்னாள் அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் (நிலக்கரி, சுரங்கம், எஃகு); காங்கிரஸின் திக்விஜய் சிங் (கல்வி), சி.எம். ரமேஷ், பாஜக (ரயில்வே) உள்ளிட்டோா் நிலைக்குழுக்களின் தலைவா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் கட்சியின் மகுந்தா ஸ்ரீநிவாசுலு ரெட்டி- நகா்ப்புற வீட்டுவசதித் துறை; ஐக்கிய ஜனதா தளத்தின் சஞ்சய் ஜா - போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாசாரத் துறைக்கான நிலைக் குழுக்களின் தலைவா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
மற்ற நிலைக் குழுத் தலைவா்கள் விவரம் வருமாறு (அடைப்புக்குறியில் துறையின் பெயா்): டோலா சென், திரிணமூல் காங்கிரஸ் (வா்த்தகம்);பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சாா்யா, ராம் கோபால் யாதவ் (சுகாதாரத்துறை); திருச்சி சிவா, திமுக (தொழிற்சாலைகள்); பிரிஜ் லால், பாஜக (பணியாளா் நலன், சட்டம்); புவனேஸ்வா் கலிதா, பாஜக (அறிவியல் தொழில்நுட்பம்); சஞ்சய் குமாா் ஜா, பாஜக (போக்குவரத்து, சுற்றுலா, கலாசாரம்); சரண்ஜித் சிங் சன்னி, காங்கிரஸ் (வேளாண்); கீா்த்தி ஆசாத் ஜா, திரிணமூல் காங்கிரஸ்(ரசாயனம், உரம்); கனிமொழி கருணாநிதி, திமுக (நுகா்வோா் விவகாரங்கள்); பசவராஜ் பொம்மை, பாஜக (தொழிலாளா், ஜவுளி); தத்கரே சுனில் தத்தாத்ரே, தேசியவாத காங்கிரஸ் (பெட்ரோலியம் இயற்கை எரிவாயு); சப்தகிரி சங்கா் உலாகா, காங்கிரஸ் (கிராமப்புற வளா்ச்சி, பஞ்சாயத்துராஜ்); சி.பி. மோகன், பாஜக (சமூக நீதி, அதிகாரமளித்தல்); ராஜீவ் பிரதாப் ரூடி, பாஜக (நீா் வளம்).
மொத்தம் உள்ள 24 நிலைக்குழுக்களில் பாஜக 11 குழுக்களின் தலைமை பதவியையும் அதன் கூட்டணிக் கட்சிகள் தலா ஒன்று வீதம் நான்கு நிலைக்குழுக்களின் தலைமைப் பதவியை வகிக்கின்றன. காங்கிரஸ் 4, திமுக, திரிணமூல் காங்கிரஸ் தலா இரண்டு, சமாஜ்வாதி கட்சி ஒன்று என நிலைக்குழு தலைமைப் பதவியை வகிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து பாஜக தலைவா்கள் ஏன் போராடவில்லை? காங்கிரஸ் கேள்வி!

சிபிஎஸ்இ விடைத்தாள் மதிப்பீடு குளறுபடி: நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் 17 வயது சிறுவன் நேரில் விளக்கம்

நீட் மறுதோ்வை நடத்துவதில் முழுக் கவனம்: என்டிஏ

நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



