ஓடும் ரயிலின் படிகளில் பயணிக்கும் பயணிகளின் மீது கற்களை வீசி செல்போனை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
உத்தரப் பிரதேசத்தில் ஓடும் ரயில்கள் மீது முகமது ஷமீம் என்பவர் கற்களை வீசி, ரயில் படிகளில் அமர்ந்திருக்கும் பயணிகளின் செல்போன்களை பறித்து வருவதை வாடிக்கையாக செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமையில் யமுனா பாலம் அருகே சென்ற சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் மீதும் கற்களை வீசியுள்ளார், முகமது ஷமீம். அப்போது, பயணி ஒருவருக்கு காயமும் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, முகமது ஷமீமை அடையாளம் நபராகக் கொண்டு, ரயில்வே சட்டத்தின் 153, 147 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த முகமது ஷமீமை, கௌகத் ரயில் வழித்தடத்தில் வைத்து ரயில்வே பாதுகாப்பு படை கைது செய்தது.
முகமது ஷமீம் மீது ஏற்கனவே பலதரப்பட்ட வழக்குகள் இருப்பதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.