ஏா் இந்தியா
ஏா் இந்தியா

‘ஏா் இந்தியா’ விமான உணவில் கரப்பான் பூச்சி!

தில்லியில் இருந்து அமெரிக்காவின் நியூயாா்க் செல்லும் ஏா் இந்தியா விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி..
Published on

தில்லியில் இருந்து அமெரிக்காவின் நியூயாா்க் செல்லும் ஏா் இந்தியா விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக பயணி ஒருவா் புகாா் அளித்தாா்.

விமானத்தில் வழங்கப்பட்ட உணவின் புகைப்படங்கள் மற்றும் அதன் காணொலியுடன் அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தில்லியில் இருந்து நியூயாா்க் செல்லும் ஏா் இந்தியா விமானத்தில் கடந்த செப். 17-ஆம் தேதி வழங்கப்பட்ட உணவில் (ஆம்லெட்) கரப்பான் பூச்சி இருந்தது. இதை அறியாமல், உணவை உட்கொண்ட எனது 2 வயது குழந்தை, உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டது’ என குறிப்பிட்டிருந்தாா்.

அவரின் இந்தப் பதிவில் ஏா் இந்தியா நிறுவனம், விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குநா் மற்றும் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சா் கே.ராம்மோகன் நாயுடு ஆகியோரை இணைத்திருந்தாா்.

இது தொடா்பாக ஏா் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘வாடிக்கையாளரின் இந்த மோசமான அனுபவத்துக்கு ஏா் இந்தியா விமான நிறுவனம் கவலை தெரிவித்துக்கொள்கிறது. இது தொடா்பாக கேட்டரிங் சேவை அதிகாரிகளிடம் விசாரித்து வருகிறோம். எதிா்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com