ஹரியாணா தேர்தல்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு!

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது காங்கிரஸ்.
congress
ஹரியாணா தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வு.
Published on
Updated on
1 min read

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

90 தொகுதிகளைக் கொண்ட ஹரியாணா சட்டப்பேரவைக்கு வருகிற அக். 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அக். 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இதையடுத்து தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிந்து பிரசாரங்களும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே பிரசாரத்தின்போது தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது.

காங்கிரஸ் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா, அசோக் கெலாட் மற்றும் அசோக் கெலாட் ஆகியோர் சண்டிகரில் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

ஹரியாணாவில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,000, ரூ. 500 மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர், பழைய ஓய்வூதியத் திட்டம், இரண்டு லட்சம் பேருக்கு அரசு வேலை, 500 யூனிட் வரை இலவச மின்சாரம், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார் விலை, சாதிவாரி கணக்கெடுப்பு ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஏற்கெனவே இந்த 7 வாக்குறுதிகளை அளித்துள்ளார்.

இதையடுத்து ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முழு வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் இன்று வெளியிட்டுள்ளது.

சண்டீகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பூபிந்தர் சிங் ஹூடா, அசோக் கெலாட் ஆகியோர் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com