பிகாரில் நின்று கொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதியதில் 3 பேர் பலியாகினர்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள கயாவிலிருந்து பாராபங்கி நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து, பிகாரின் கைமூர் மாவட்டத்தில் உள்ள மோகனியாவில், நின்று கொண்டிருந்த லாரி மீது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும், நான்கு பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் நிலையில் கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறுகின்றனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடப்பதாக துணைப்பிரிவு காவல் அதிகாரி தெரிவித்தார்.