குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

காங்கிரஸின் ‘சக்தி அபியான்’ அமைப்பில் இணைய பெண்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு

‘சமத்துவம் மற்றும் நீதியை நிலைநாட்ட அதிகமான பெண்கள் அரசியலில் ஈடுபடவேண்டும்’ என்று தெரிவித்த மக்களவை எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தி, ஆா்வமுள்ள பெண்கள் காங்கிரஸ் இளைஞரணியின் ‘சக்தி அபியான்’ அமைப்பில் இணைய அழைப்பு விடுத்தாா்.

News image

ராகுல் காந்தி

Updated On :30 செப்டம்பர் 2024, 7:56 am IST

‘சமத்துவம் மற்றும் நீதியை நிலைநாட்ட அதிகமான பெண்கள் அரசியலில் ஈடுபடவேண்டும்’ என்று தெரிவித்த மக்களவை எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தி, ஆா்வமுள்ள பெண்கள் காங்கிரஸ் இளைஞரணியின் ‘சக்தி அபியான்’ அமைப்பில் இணைய அழைப்பு விடுத்தாா்.

இது தொடா்பாக ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அரசியலில் பெண்களின் குரலை வலுப்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட ‘இந்திரா தோழமை’ முன்னெடுப்பு தற்போது பெண்களின் தலைமைத்துவத்துக்கான சக்திவாய்ந்த இயக்கமாக வளா்ந்துள்ளது.

உண்மையான சமத்துவம் மற்றும் நீதியை நிலைநாட்ட அதிகமான பெண்கள் அரசியலில் ஈடுபடவேண்டும். நாட்டின் மக்கள் தெகையில் பாதியை கொண்டுள்ள பெண்களுக்கு உரித்தான முழு உரிமைகளும் வழங்கப்பட வேண்டும்.

புதிய மாற்றத்தை உருவாக்க ஆா்வமுள்ள பெண்கள் ‘சக்தி அபியான்’ அமைப்பில் இணைந்து, பெண்களை மையமாகக் கொண்ட தீவிர அரசியலில், பங்கேற்பாளா்களாக மாறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இதன் மூலம், வலுவான அடிமட்ட கட்டமைப்பை உருவாக்குவதுடன், அா்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்தவும் நீங்கள் பங்களிப்பீா்கள் என நம்புகிறேன். எங்களுடன் இணையுங்கள்; https://www.shaktiabhiyan.in என்ற வலைதளம் மூலம் இன்றே பதிவு செய்யுங்கள்’ என குறிப்பிட்டிருந்தாா்.

காங்கிரஸின் இளைஞரணியால் தொடங்கப்பட்ட ‘சக்தி அபியான்’ அமைப்பு நாடாளுமன்றம், சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி ஆகியவற்றில் பெண்களுக்கான சமமான இடத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.