ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

ஆம் ஆத்மி சட்டப்படி செயல்படும்: பிரியங்கா கக்கர் 

ஆம் ஆத்மி கட்சி சட்டப்படி செயல்படும் எனத் தலைமை தேசிய செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். 

News image
Updated On :2 ஜனவரி 2024, 1:25 pm IST

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு அமலாக்கத்துறை அழைப்பான் அனுப்பியது தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சி சட்டப்படி செயல்படும் எனத் தலைமை தேசிய செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். 

திலி அரசின் கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் விசாரணை நடத்துவதற்காக ஜனவரி 3-ம் தேதி ஆஜராகுமாறு தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

கேஜரிவால் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராவாரா என்று செய்தியாளர் சந்திப்பின்போது கக்கரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் இந்த கேள்விக்கு பதிலளிக்க எங்கள் சட்டக் குழு தயாராக இருக்கும். சட்டப்படி செயல்படுவோம் என்றார். 

நவம்பர் 2 மற்றும் டிசம்பர் 21-ம் தேதிக்கு ஆஜராகுமாறு முன்னதாக இரண்டு சம்மன்கள் அனுப்பப்பட்ட நிலையில், அதனைத்தொடர்ந்து ஜனவரி 3-ம் தேதிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு கேஜரிவாலுக்கு மூன்றாவது அழைப்பாணையை அமலாக்கத்துறை அனுப்பியுள்ளது.

தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் ஏற்கனவே துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி எம்.பி.சஞ்சய் சிங் உள்ளிட்டோர்  கைது செய்யப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.