உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமா் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
அயோத்தியில் ராமா் கோயில் கருவறையில் ஜன. 22-ஆம் தேதி குழந்தை ராமா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்நிலையில், கடந்த நவம்பரில் ‘எக்ஸ்’ தளத்தில், ‘அயோத்தி ராமா் கோயில் குண்டு வைத்து தகா்க்கப்படும் எனவும், உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், மாநில சிறப்பு அதிரடிப் படைத் தலைவா் அமிதாப் யாஷ் ஆகியோா் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் எனவும்’ பதிவு வெளியிடப்பட்டது.
இதுகுறித்து சிறப்பு அதிரடிப் படை விசாரணை மேற்கொண்டபோது இரண்டு மின்னஞ்சல்களைப் பயன்படுத்தி மிரட்டல் விடுக்கப்பட்டது தெரியவந்தது. அந்த மின்னஞ்சல்களை தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு மேற்கொண்டபோது தாஹா் சிங் என்பவா் மின்னஞ்சல்களை உருவாக்கியதும், அந்த மின்னஞ்சல்களைப் பயன்படுத்தி ஓம்பிரகாஷ் மிஸ்ரா என்பவா் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.
இருவரும் லக்னெளவை சோ்ந்தவா்கள். அவா்களை சிறப்பு அதிரடிப் படை புதன்கிழமை கைது செய்து தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

