கடும் குளிர் காரணமாக திரையில் பள்ளிகளுக்கு ஜனவரி 10ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தில்லி, உத்தர பிரதேசம், ஹரியாணா உள்பட வட மாநிலங்களில் கடந்த சில நாள்களாக குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும், காலை வேளைகளில் அடா் மூடுபனி நிலவி வருகிறது. இதனால் வடமாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே குளிர்கால விடுமுறைக்குப் பிறகு தில்லியில் பள்ளிகள் திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அங்கு கடும் குளிர் நிலவி வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை ஜனவரி 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தில்லி கல்வி அமைச்சர் அதிஷி தனது எக்ஸ் பதவில், குளிர் காலநிலை காரணமாக நர்சரி முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் அடுத்த 5 நாள்களுக்கு மூடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் தலைநகர் தில்லியில் அடுத்த சில நாள்களுக்கு அடர்த்தியான மூடுபனி, குறைந்த வெப்பநிலை நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


