இரண்டாவது முறையாக ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்ற தீப்தி சர்மா! மணிப்பூரில் கார்கள் மீது துப்பாக்கிச்சூடு: 2 பெண்கள் உள்பட 4 பேர் பலி! வரலாற்று உச்சத்தைத் தொட்ட பேடிஎம் பங்குகள்! உதகை மலை ரயில் சேவை மேலும் 5 நாள்கள் ரத்து அசாமில் மினி பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதல்: 23 பேர் பலி; 20 பேர் காயம் மீனவர்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை கௌரவ விரிவுரையாளர்கள் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு

போயிங் 737-8 மேக்ஸ் விமானங்களின் அவசரகால கதவுகள் ஆய்வு: விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு

போயிங் 737-8 மேக்ஸ் விமானங்களில் உள்ள அவசரகால கதவுகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆய்வு செய்யுமாறு அனைத்து விமான நிறுவனங்களுக்கும் டிஜிசிஏ சனிக்கிழமை உத்தரவிட்டது.

போயிங் 737-8 ரக விமானம்

Updated On :

போயிங் 737-8 மேக்ஸ் விமானங்களில் உள்ள அவசரகால கதவுகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆய்வு செய்யுமாறு அனைத்து விமான நிறுவனங்களுக்கும் விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) சனிக்கிழமை உத்தரவிட்டது.

அமெரிக்காவில் போா்ட்லாந்திலிருந்து கலிஃபோா்னியா மாகாணத்தின் ஒன்டாரியோ நகரத்துக்கு 174 பயணிகளுடன் அலாஸ்கா நிறுவனத்தின் போயிங் 787-9 மேக்ஸ் விமானம் வெள்ளிக்கிழமை மாலை 5.07 மணியளவில் புறப்பட்டது. புறப்பட்ட 6 நிமிஷங்களில் 16,000 அடி உயரத்தில் (4.8 கி.மீ.) பறந்துகொண்டிருந்தபோது, விமானத்தில் பொருத்தப்பட்ட அவசரகால கதவு திடீரென தனியே பிரிந்து விழுந்து விட்டது.

இதையடுத்து, போா்ட்லாந்து விமான நிலையத்தில் அந்த விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. நடுவானில் விமானத்தின் காற்றழுத்தம் கடும் மாறுபாடு அடைந்த போதிலும், அதிருஷ்டவசமாக பயணிகள் அனைவரும் காயமின்றித் தப்பினா்.

இந்தச் சம்பவத்தையடுத்து, விமான நிறுவனங்களுக்கு டிஜிசிஏ இத்தகைய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இது குறித்து மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘இந்திய விமான நிறுவனங்கள் தங்களிடம் செயல்பாட்டில் உள்ள போயிங் 737-8 விமானங்களின் அவசரகால கதவுகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை நண்பகலுக்குள் ஆய்வு செய்யுமாறு டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது. இந்த ஆய்வு விமானங்களில் இரவு நேரத்தில் நடைபெறும் என்பதால், பயண நேரங்களில் மாற்றம் இருக்காது. அலாஸ்கா விமானத்தில் நிகழ்ந்த சம்பவம் தொடா்பாக, போயிங் நிறுவனத்திடமிருந்து எவ்வித தகவலும் வரவில்லை’ என்றாா்.

இந்தியாவில் ஆகாசா ஏா், ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்பைஸ்ஜெட் ஆகிய விமான நிறுவனங்கள் போயிங் 737-8 மேக்ஸ் விமானங்களை இயக்கி வருகின்றன.

இந்தியாவில் உள்ள விமான நிறுவனங்களிடம் போயிங் 737-9 விமானங்கள் பயன்பாட்டில் இல்லை. இருப்பினும், போயிங் 737-8 விமானங்களில் ஆய்வு செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பி737 மேக்ஸ் விமானம் ஒன்றில் பராமரிப்பு பணியின்போது குறைபாடு இருந்தது கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து, அந்த விமானங்களை ஆய்வு செய்யுமாறு விமான நிறுவனங்களை போயிங் நிறுவனம் அண்மையில் கேட்டுக் கொண்டது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.