கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

மெகபூபா முப்தி சென்ற கார் விபத்து!

ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி சென்ற கார் விபத்தில் சிக்கியது.

News image
Updated On :11 ஜனவரி 2024, 10:09 am

DIN

ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி சென்ற கார் விபத்தில் சிக்கியது.

அனந்த்நாக் மாவட்டம் கானாபால் பகுதியில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டு வீடுகளை இழந்தவர்களை சந்திப்பதற்காக சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக மக்கள் ஜனநாயக கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கானாபால் நோக்கி சங்கம் என்ற பகுதி அருகே மெகபூபா முப்தியின் கார் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் மெகபூபா முப்தியும், அவரது பாதுகாப்பு காவலர்களும் எந்த காயமும் இன்றி தப்பினர். அவரது கார் ஓட்டுநர் மட்டும் காலில் காயத்துடன் மீட்கபட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து வேறொரு கார் மூலம் மெகபூபா கானாபால் நோக்கி புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.