கனடாவில் விமானம் புறப்படும்போது திடீரென கீழே குதித்த நபர்!
கனடாவில் விமானம் புறப்படும்போது திடீரென கீழே குதித்த நபர்!

கனடாவில் விமானம் புறப்படும்போது திடீரென கீழே குதித்த நபர்!

கனடாவில் விமானம் புறப்படும்போது திடீரென கீழே குதித்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
Published on

கனடாவில் விமானம் புறப்படும்போது திடீரென கீழே குதித்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

ஜனவரி 8 அன்று கனடாவில் உள்ள டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து துபாய் நோக்கிச் செல்லும் போயிங் 747 ரக விமானம் ஒன்று புறப்படத் தயாராக இருந்தது. 

இந்த நிலையில், விமானத்தில் இருந்த கனடா பயணி ஒருவர் இருக்கையில் அமராமல், விமானம் புறப்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன்பாக திடீரென கேபின் கதவைத் திறந்து கீழே குதித்ததார். இதனால் சகபயணிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். 20 அடி உயரத்திலிருந்து கீழே குதித்ததால் பயணிக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது. 

இந்த சம்பவத்தையடுத்து காவல்துறை மற்றும் அவசர சேவைத் துறையினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். விமானத்திலிருந்து கீழே குதித்த நபரால் போயிங் விமானம் 6 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. 

விமானத்திலிருந்து திடீரென கீழே குதித்ததற்கான காரணம் என்ன? என்பதை அந்த பயணியிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com