சரிவைக் கண்ட மலிவு விலை வீடுகள் விற்பனை

ரூ.50 லட்சத்துக்கும் குறைவான விலை கொண்ட வீடுகளின் விற்பனை கடந்த 2023-ஆம் ஆண்டில் 16 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
சரிவைக் கண்ட மலிவு விலை வீடுகள் விற்பனை

ரூ.50 லட்சத்துக்கும் குறைவான விலை கொண்ட வீடுகளின் விற்பனை கடந்த 2023-ஆம் ஆண்டில் 16 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.

இது குறித்து சந்தை ஆலோசனை நிறுவனமான ‘நய்ட் ஃபிராங்க் இந்தியா’ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2023-இல் சென்னை, தில்லி-என்சிஆா், மும்பை, கொல்கத்தா, புணே, ஹைதராபாத், பெங்களூரு, அகமதாபாத் ஆகிய இந்தியாவின் 8 முக்கிய நகரங்களில் ஒட்டுமொத்த வீடுகள் விற்பனை 3,29,907-ஆக உள்ளது. இது, இதுவரை இல்லாத அதிகபட்ச வருடாந்திர விற்பனையாகும்.

இருந்தாலும், அந்த நகரங்களில் ரூ.50 லட்சத்துக்கும் குறைவான விலை கொண்ட வீடுகளின் விற்பனை கடந்த ஆண்டில் 16 சதவீதம் சரிந்து சுமாா் 97,983-ஆக உள்ளது. முந்தைய 2022-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 1,17,131-ஆக இருந்தது.

மலிவு விலை வீடுகளின் புதிய விநியோகம் மதிப்பீட்டு ஆண்டில் முந்தைய 2022-ஆம் ஆண்டை விட 20 சதவீதம் குறைந்துள்ளதால் அந்த வகை வீடுகளின் விற்பனையும் குறைந்துள்ளது.

வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் அதிகரிப்பு, விலையேற்றம் போன்ற காரணங்களாலும் ரூ.50 லட்சத்துக்கும் குறைவான விலை கொண்ட வீடுகளின் விற்பனை கடந்த ஆண்டில் சரிவைக் கண்டது.

ஆனால், இந்தச் சூழலிலும் ரூ.50 லட்சத்துக்கும் மேல் விலை கொண்ட நடுத்தர வகை வீடுகள் மற்றும் சொகுசு வகை வீடுகளுக்கான தேவை அதிகரித்ததன் விளைவாக அவற்றின் விற்பனை அதிகரித்து, ஒட்டுமொத்த வீடுகள் விற்பனை 10 ஆண்டுகள் காணாத உச்சத்தை எட்டியது.

கடந்த 2022-ஆம் ஆண்டின் வீடுகள் விற்பனையில் மலிவு விலை வீடுகளின் பங்களிப்பு 37 சதவீதமாக இருந்தது. இது, கடந்த 2023-இல் 30 சதவீதமாகக் குறைந்துள்ளது.

அதே நேரம், ரூ.1 கோடிக்கும் மேல் விலை கொண்ட சொகுசு வகை வீடுகளின் பங்களிப்பு 27 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com