தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங்குக்கு நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவு.
கலால் கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் சஞ்சய் சிங் மற்றும் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை பிப்.3-ம் தேதி வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.
இதையும் படிக்க | ஹேமந்த் சோரனிடம் விசாரணையை துவக்கியது அமலாக்கத்துறை!
மேலும் சஞ்சய் சிங்கின் நெருங்கிய உதவியாளரான சர்வேஷ் மிஸ்ராவின் ஜாமீன் மனுவின் மீது உத்தரவிடாமல் நிறுத்தி வைத்துள்ளது.
மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் இருவரின் நீதிமன்றக் காவல் முடிவடைந்ததையடுத்து, அவர்கள் இருவரும் இன்று (சனிக்கிழமை) திகார் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர்.
குடியரசு தினத்திற்கான பாதுகாப்பு பணிகளில் அதிக எண்ணிக்கையிலான போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஏற்பட்டுள்ள காவலர்கள் பற்றாக்குறையினால், பாதுகாப்பு காரணங்களுக்காக இவர்கள் இருவரையும் நேரில் ஆஜர்படுத்த முடியவில்லை என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங்குக்கு நீதிமன்றக் காவலை பிப்ரவரி 3-ம் தேதி வரை நீட்டித்து தில்லி நீதிமன்ற நீதிபதி எம்.கே.நாக்பால் உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டிற்கு வடக்கிலிருந்து ஆபத்து: மு.க. ஸ்டாலின்

உலகின் வயதான கொரில்லா 69-வது பிறந்தநாளைக் கொண்டாடியது!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


