அயோத்தி: சிறப்பு வாகன நிறுத்துமிடங்கள்!

விழாவுக்கு வருகிற பக்தர்கள், விஐபிக்கள் மற்றும் காவல்துறையினரின் வாகனங்களை நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அயோத்தி: சிறப்பு வாகன நிறுத்துமிடங்கள்!

அயோத்தி ராமர் கோயில் மூலவர் பிரதிஷ்டை விழாவிற்கு வரும் பார்வையாளர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகளை உத்தர பிரதேச அரசு மேற்கொண்டு வருகிறது.

நகருக்கு உள்ளேயும் வெளியேயும் 51 வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

22,825 வாகனங்களை இங்கு நிறுத்த இயலும். டிரோன் மூலமாக வாகன நிறுத்தங்கள் கண்காணிக்கப்படுவதுடன் கூகுள் மேப்பிலும் அடையாளமிடப்பட்டுள்ளன என அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

விவிஐபி மற்றும் விஐபிக்களுக்கு தனியாக வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

ராமபாதை, பக்திபாதை, தர்மபாதை, பரிகிராம பாதை, பந்தபாதை, தெஹ்ரி சந்தை ஆகிய இடங்களிலும் அயோத்தியில் இருந்து கோண்டா செல்லும் சாலை, தேசிய நெடுஞ்சாலை ஆகிய இடங்களிலும் வாகன நிறுத்துமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும், பன்னடுக்கு வாகன நிறுத்துமிடத்திலும் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விவிஐ பகுதியில் 1,225 வாகனங்களும் விஐபி பகுதியில் 10 ஆயிரம் வாகனங்களும் நிறுத்தலாம். மேலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறை வாகனங்களுக்கு 8 இடங்களில் வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகள் இந்த வாகன நிறுத்துமிடங்களில் பின்பற்றப்படவுள்ளதாக கூடுதல் போக்குவரத்து காவல்துறை இயக்குநர் ஜெனரல் பிடி.பால்சன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com