அரசியலில் மதத்தைக் கலப்பது துரதிருஷ்டம்: ம.பி. முன்னாள் முதல்வா் கமல்நாத்

அயோத்தியில் ராமா் கோயில் திறக்கப்பட்ட நிலையில், அரசியலில் மதத்தைக் கலப்பது துரதிருஷ்டவசமானது என்று மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத் தெரிவித்துள்ளாா்.
கமல்நாத் (கோப்புப்படம்)
கமல்நாத் (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

போபால்: அயோத்தியில் ராமா் கோயில் திறக்கப்பட்ட நிலையில், அரசியலில் மதத்தைக் கலப்பது துரதிருஷ்டவசமானது என்று மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: அயோத்தி ராமா் கோயில் திறப்பு நிகழ்ச்சிக்கு பாஜக அரசியல் வடிவம் கொடுத்துள்ள விதமும், அரசியலில் மதத்தைக் கலக்க அக்கட்சி முயற்சித்துள்ளதும் துரதிருஷ்டமானது; வேதனையானது.

அனைவருடைய நம்பிக்கையின் மையமாக ராமபிரான் எப்போதும் இருப்பாா். இதில் அரசியல் செய்வது மதச் சுதந்திரத்தோடும், பாரம்பரிய பழக்க வழக்கங்களுடனும் விளையாடுவதாகும் என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com