குறுகிய காலத்தில் அடிக்கடி தனது அரசியல் கூட்டணியை மாற்றிக் கொள்ளும் நிதீஷ் குமாருக்கு 'பச்சோந்தி ரத்னா' விருது வழங்க வேண்டும் என்று தேஜ் பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளார்.
இன்னும் ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாஜக கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் இணைந்து 'இந்தியா' என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன.
இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்துவந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார், திடீரென அதில் இருந்து விலகி, மீண்டும் பாஜக உடன் கைகோர்த்துள்ளார். பாஜக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் ஆட்சியமைப்பதற்கு உரிமை கோரியுள்ளார்.
இதனைக் குறிப்பிட்டு பேசியுள்ள லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், “பச்சோந்திகள் தனது நிறத்தை அடிக்கடி மாற்றிக் கொள்வதற்கு புகழ்பெற்றவை.
அதனைப் போலவே ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் குறுகிய காலத்திற்குள் அடிக்கடி தனது அரசியல் கூட்டணியை மாற்றிக் கொள்கிறார்.
இப்படி விரைவாக நிறம் மாறக்கூடிய நிதீஷ் குமாரின் திறமையைப் பாராட்டி அவருக்கு 'பச்சோந்தி ரத்னா' விருது வழங்கப்பட வேண்டும்.” என்று கூறினார்.
இதையும் படிக்க | பிகாரில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் நிதீஷ் குமார்!
2014 வரை பாஜக கூட்டணியில் இருந்த நிதீஷ் குமார், 2015 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணியில் இணைந்து முதலமைச்சரானார். அந்தப் பதவிக்காலம் முடியும் முன்பே காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறி, பாஜக ஆதரவுடன் முதல்வர் பதவியை தொடர்ந்தார்.
அதேபோல, 2020ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை பாஜக உடன் சேர்ந்து வென்ற நிதீஷ் குமார், தேர்தலுக்குப் பின்பு அக்கூட்டணியில் இருந்து விலகி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்தார். தற்போது மீண்டும் பாஜக ஆதரவுடன் முதல்வராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி கேபிடல்ஸின் பயிற்சியாளராகும் யுவராஜ் சிங்!

சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட முதல் பாடல்!

முதல்முறை அரேபிய படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மான்!
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



