பிகாரில் பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைக்க நிதீஷ் குமார் பிகார் ஆளுநரிடம் உரிமை கோரியுள்ளார்.
நிதிஷ் குமார் தனது ராஜிநாமா கடிதத்தை பிகார் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரிடம் இன்று வழங்கினார். பிகார் மாநிலம் பாட்னாவில் இன்று நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தில் நிதிஷ் குமாருக்கு ஆதரவளிக்க பாஜக எம்.எல்.ஏக்கள் முடிவு செய்தனர்.
இந்த நிலையில், பாஜக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை நிதீஷ் குமார் ஆளுநரிடம் வழங்கினார். தொடர்ந்து பிகாரில் ஆட்சி அமைப்பதற்கும் உரிமை கோரியுள்ளார்.
243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் சட்டப் பேரவையில், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜகவுக்கு உள்ள 128 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை பிகார் ஆளுநரிடம் நிதீஷ் குமார் வழங்கினார்.
இதையும் படிக்க: முதல்வா் நிதீஷ் குமார் ராஜிநாமா!
இன்று மாலையே பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வராக நிதீஷ் குமார் பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செயின்ட் - கோபைன் தொழிற்சாலையைப் பார்வையிட்ட முதல்வர் விஜய் - புகைப்படங்கள்
நேபாளத்தில் கலவரம்: உ.பி.யில் 7 மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

இன்றைய முக்கிய செய்திகள் ஆகஸ்ட் 3 - நேரலை!

மேக்மைட்ரிப் முதல் காலாண்டு லாபம் 8.6% அதிகரிப்பு!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



