கர்நாடகம்: லாரி மீது பேருந்து மோதி 5 பேர் பலி

கர்நாடகத்தில் பழுதாகி நின்ற லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 5 பேர் பலி
கர்நாடகம்: லாரி மீது பேருந்து மோதி 5 பேர் பலி
ENS
Published on
Updated on
1 min read

கர்நாடகத்தில் பழுதாகி நின்ற லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர்.

கர்நாடகம் மாநிலம் ஜேவர்கி நகரில் நெலோகி கிராஸ் அருகே டயர் வெடித்து பழுதாகிய கனரக லாரி ஒன்று, சனிக்கிழமை அதிகாலையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், அதிகாலை 3.30 மணியளவில் அவ்வழியாகச் சென்ற தனியார் பேருந்து, லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பயணிகளில் 13 வயது சிறுமி உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்; மேலும், பயணிகள் பலர் காயமடைந்ததால், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் பாகல்கோடு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் கலபுராகி மாவட்டத்தில் உள்ள தர்காவுக்கு சென்று கொண்டிருந்த சமயத்தில் விபத்து ஏற்பட்டதாகவும் காவல் அதிகாரிகள் கூறினர்.

விபத்தினைத் தொடர்ந்து, சம்பவ இடத்திலிருந்து பேருந்தின் ஓட்டுநர் தப்பியோடி விட்டார். தேடப்பட்டு வரும் பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிக்க: ஒடிசா தம்பதியரின் குழந்தையைக் கடத்திய தமிழகத்தைச் சேர்ந்தவர் கைது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com