துணை வடிகால்களை ஆய்வுசெய்தார் தில்லி முதல்வர்!

தில்லியில் துணை வடிகால் தூர்வாரும் பணிகள் கண்காணிப்பு..
முதல்வர் ரேகா குப்தா
முதல்வர் ரேகா குப்தா
Published on
Updated on
1 min read

தேசிய தலைநகரில் துணை வடிகால்களை இன்று முதல்வர் ரேகா குப்தா ஆய்வு செய்தார்.

ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

தில்லியில் உள்ள ஒவ்வொரு பெரிய வடிகால்களையும் நாங்கள் இன்று பார்வையிடுகிறோம். யமுனை நதியில் கலக்கும் 22 பெரிய வடிகால்களைத் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் இந்த பணிகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஏசி அறைகளிலிருந்து இயக்கப்பட்ட முந்தைய அரசைப் போல் அல்லாமல், நாங்கள் களத்திலிருந்து பணியாற்றி வருகிறோம். எங்கள் அரசு மக்களுக்காக உழைக்க உறுதி பூண்டுள்ளது.

முன்னதாக, தில்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா, அமைச்சர் பர்வேஷ் வர்மா ஆகியோருடன் சேர்ந்து, தேசிய தலைநகரில் உள்ள வஜிராபாத்தில் உள்ள துணை வடிகாலை ஆய்வு செய்தோம். தில்லி அரசு வடிகால்களைச் சரியான நேரத்தில் அகற்றுவதை உறுதிசெய்யும் சிறப்புப் பொறுப்பை வெள்ளம் மற்றும் நீர்ப்பாசனத் துறைக்கு வழங்கியுள்ளது.

வஜிராபாத் வடிகால், யமுனையில் பாயும் முக்கிய இடங்களில் ஒன்றாகும், எனவே, நதியைச் சுத்தம் செய்வதில் இது மிகவும் முக்கியமானது. குறிப்பாக, தில்லியின் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 48 இடங்களை பாஜக கைப்பற்றிய பிறகு, யமுனை நதியைச் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது,

தில்லியில் தேர்தலின்போது யமுனையில் மாசுபாடு ஒரு முக்கிய பிரச்னையாக இருந்தது, ஆக்கிரமிப்புகள், வெள்ள மேலாண்மை தொடர்பாக அரசியல் கட்சிகள் ஒன்றையொன்று குறிவைத்தன.

பாஜக ஆம் ஆத்மி கட்சியைத் தாக்கியது மற்றும் யமுனையைச் சுத்தம் செய்யும் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதாகக் குற்றம் சாட்டியது. இதுதவிர, பாஜக தனது தேர்தல் அறிக்கையில் யமுனையை சுத்தம் செய்வது முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com