நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்: ஜூலை 19-இல் அனைத்துக் கட்சி கூட்டம்!‘மன்மோகன் சிங் தற்கொலை செய்வேன் எனக் கூறினார்’ - பரபரப்பு தகவல்கள்!பிரதமா், முதல்வா்கள் 30 நாள்கள் சிறையிலிருந்தால் ‘நிரந்தர’ பதவி நீக்கம் கூடாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஆல்கஹால் கலந்த மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடு!
/

கோட்-சூட்டுடன் அறுவைச்சிகிச்சை அரங்குக்கு செல்லும் மரண மருத்துவர்! வெளியான சிசிடிவி காட்சி

கோட்-சூட்டுடன் அறுவைச்சிகிச்சை அரங்குக்கு செல்லும் மரண மருத்துவர் என அடையாளப்படுத்தப்படும் போலி மருத்துவரின் சிசிடிவி காட்சி வெளியானது.

News image

போலி மருத்துவர்

Updated On :11 ஏப்ரல் 2025, 4:23 pm IST

தவறான சிகிச்சையால் 7 போ் உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் போலி இருதய நிபுணா், மருத்துவமனையில் கோட்-சூட்டுடன் அறுவைச்சிகிச்சை அரங்குக்குச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

மத்தியப் பிரதேச மாநிலம் தமோ மாவட்டத்தில் உள்ள மிஷன் மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சியில், சூட், கோட்டு, கழுத்தில் டை கட்டப்பட்டு அறுவைசிகிச்சை அரங்குக்கு நரேந்திர விக்ரமாதித்ய யாதவ் என்ற அந்த போலி மருத்துவர் செல்வதும், அவர் பின்னால், அறுவைச்சிகிச்சை அரங்கில் பணியாற்றும் செவிலியர்கள் உள்ளிட்டோர் அவர்களுக்கான சீருடையில் செல்வதும் பதிவாகியுள்ளது.

இந்த சிசிடிவி காட்சிகள் இன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

இவர் இப்படியேதான் அறுவைச்சிகிச்சையும் செய்வாரா? அல்லது உள்ளே சென்றபிறகு அறுவைசிகிச்சை செய்வதற்கான சீருடை அணிவாரா என்பதுதான் பலரது கேள்வியாக உள்ளது. போலி மருத்துவர் என்பதை இதுவே காட்டிக்கொடுப்பதாகவும் பலரும் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலத்தில், தவறான சிகிச்சை அளித்து 7 போ் உயிரிழந்த சம்பவத்தில் தொடா்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்ட போலி இருதய சிகிச்சை நிபுணா் கடந்த வாரம் கைது செய்யப்பட்டிருந்தார்.

தமோ மாவட்டத்தில் உள்ள மிஷனரி மருத்துவமனையில் பணிபுரியும் ஒருவா் தன்னை இருதய சிகிச்சை நிபுணா் என சொல்லிக்கொண்டு நோயாளிகளுக்கு தவறான சிகிச்சை அளித்ததில் 7 போ் பலியானதாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு வந்த புகாரை விசாரித்த போதுதான் இந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

அதாவது, நரேந்திர ஜான் கேம் என்ற பெயருடைய நபா் பிரிட்டனைச் சோ்ந்த பிரபல இருதய சிகிச்சை நிபுணா்- பேராசிரியா் ஜான் கேமின் பெயரை தவறாகப் பயன்படுத்தி, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளாா். ஆனால் அவரின் உண்மையான பெயா் விக்ரமாதித்யா யாதவ் என்று தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, உத்தரப்பிரதேசத்தில் விக்ரமாதித்யா யாதவ் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.