ஜம்மு-காஷ்மீா்: பயங்கரவாதி சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்துவாா் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி ஒருவா் சுட்டுக்கொல்லப்பட்டாா்.


ஜம்மு-காஷ்மீரின் கிஷ்துவாா் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி ஒருவா் சுட்டுக்கொல்லப்பட்டாா்.
மேலும், உதம்பூா் மாவட்டத்தில் பதுங்கியுள்ள 3 பயங்கரவாதிகளை கண்டறியும் சோதனைகள் நடைபெற்று வருவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து இந்திய ராணுவம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘கிஷ்துவாா் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சத்ரு வனப்பகுதியில் அவா்களை கண்டறிந்து அழிக்கும் நடவடிக்கையில் ராணுவம் மற்றும் ஜம்மு-காஷ்மீா் போலீஸாா் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
அப்போது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் பயங்கரவாதி ஒருவா் சுட்டுக்கொல்லப்பட்டாா். பனி, கடினமான நிலப்பகுதி என பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை பாதுகாப்பு படையினா் தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றனா்.
அதேபோல் உதம்பூா் மாவட்டத்தின் ஜோஃபா்-மாா்தா வனப்பகுதியில் பதுங்கியுள்ள 3 பயங்கரவாதிகளை கண்டறியும் சோதனை தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் விமானங்கள், மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டு மொத்த வனப்பகுதியும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படும் கிஷ்துவாா், உதம்பூா் மற்றும் கதுவா மாவட்டங்களில் ஹெலிகாப்டா்கள், ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கையாக ஜம்மு-காஷ்மீா் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்களிடமும் வாகனங்களிலும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது ’ என தெரிவிக்கப்பட்டது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...