தவெக சார்பில் ஜூலை 1-இல் தோழமைக் கட்சிகள் கூட்டம்தமிழகத்தில் இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு ஜூலை 1-இல் ஜிஎஸ்டிக்கு வயது 10: ஏஐ மூலம் செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ‘திடீர்’ ஓய்வு!
/

பிரதமர் மோடி இல்லத்தில் அமெரிக்க துணை அதிபர்!

அமெரிக்க துணை அதிபர் ஜே. டி. வேன்ஸ் மற்றும் அவரின் குடும்பத்தாரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.

News image

ஜே. டி. வேன்ஸ் மற்றும் அவரின் குடும்பத்தினரை வரவேற்ற நரேந்திர மோடி - ANI

Updated On :21 ஏப்ரல் 2025, 8:51 pm IST

அமெரிக்க துணை அதிபர் ஜே. டி. வேன்ஸ் மற்றும் அவரின் குடும்பத்தாரை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப். 21) சந்தித்தார்.

தில்லியில் உள்ள பிரதமர் இல்லத்துக்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்ற ஜே. டி. வேன்ஸை பிரதமர் வரவேற்றார்.

இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் வணிக ஒப்பந்தம் குறித்த விவாதங்கள் அவர்களின் பேச்சுவார்த்தைகளில் முதன்மையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க துணை அதிபர் ஜே. டி. வேன்ஸ், தனது மனைவி உஷா மற்றும் குழந்தைகளுடன் 4 நாள்கள் பயணமாக இந்தியாவுக்கு வருகைப் புரிந்துள்ளார்.

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விமான நிலையத்தில், ஜே. டி. வேன்ஸ் மற்றும் அவரின் குடும்பத்தாரை வரவேற்றார். வான்ஸின் மனைவி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால், குழந்தைகள் இந்திய பாரம்பரிய உடை அணிந்திருந்தனர்.

துணை அதிபருக்கு விமான நிலையத்தில் ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. மேலும், பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.