45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பஹல்காம் தாக்குதல்: ஆப்கன் அரசு கண்டனம்!

பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆப்கன் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

News image
தாக்குதலில் ஈடுபட்டவர்களாக வெளியிடப்பட்ட மாதிரி ஓவியம்- PTI
Updated On :23 ஏப்ரல் 2025, 2:32 pm

DIN

பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆப்கன் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் பலியான நிலையில், இந்தத் தாக்குதலுக்கு தலிபான்கள் ஆளும் ஆப்கன் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, ஆப்கன் நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியதாவது, ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரக வெளியுறவு அமைச்சகம் கடுமையாகக் கண்டிக்கிறது.

இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆப்கன் அரசு இரங்கல் தெரிவிக்கிறது. இத்தகைய சம்பவங்கள் பாதுகாப்பு குறித்த முயற்சிகளை குறைமதிப்புக்கு உள்ளாக்குகின்றன என்று தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பஹல்காமில் பயங்கரவாதிகளால் செவ்வாய்க்கிழமை 26 சுற்றுலாப் பயணிகள் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு ’லஷ்கர்-ஏ-தொய்பா’ பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ’தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ பொறுப்பேற்றுள்ளது.

இந்த நிலையில், இந்தத் தீவிரவாதத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், மத்திய அரசு வெளியிட்ட தாக்குதல் நடத்தியவர்களின் மாதிரி ஓவியங்களைச் சுட்டிக்காட்டி, அவர்கள் மூவரும் பாகிஸ்தானியர்கள்போல் உள்ளதாக பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.