
பாகிஸ்தானியர்கள் வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால் தமிழகத்தில் உள்ள பாகிஸ்தானியர்களை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஜம்மு - காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் ஏப்.22 (செவ்வாய்க்கிழமை) பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாதத் தாக்குதல் நாடு முழுவதுமே கண்டனங்கள் எழுந்துள்ளன.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்தவகையில் இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் இந்தியாவைவிட்டு வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் உள்ள பாகிஸ்தானியர்கள் அட்டாரி- வாகா எல்லை வழியாக இந்தியாவைவிட்டு வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகளை உடனடியாக நிறுத்தவும் பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா வழங்கிய அனைத்து விசாக்களும் ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தொழில், மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட காரணங்களுக்காக தமிழகத்திற்கு வந்துள்ள பாகிஸ்தானியர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தானியர்களை நாளைக்குள் தமிழகத்தை விட்டு வெளியேற்றும் பணிகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிக்க | பாகிஸ்தானியர்களின் விசா ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.