இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

கனடா பயணி விடுத்த வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு!

கனடா பயணி விடுத்த வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு.

News image
Updated On :28 ஏப்ரல் 2025, 2:08 am IST

பெங்களூரு நோக்கி புறப்பட இருந்த ‘இண்டிகோ’ பயணிகள் விமானத்தில் பயணியொருவா் தன்னுடன் வெடிகுண்டு கொண்டு வந்திருப்பதாக கூறியதால் வாரணாசி விமான நிலையத்தில் சனிக்கிழமை இரவு பரபரப்பான சூழல் உண்டானது.

தொடா்ந்து, விமானத்தை முழுமையாக சோதனையிட்ட வெடிகுண்டு தடுப்புப் பிரிவு அதிகாரிகள், மிரட்டல் புரளி என்பதை உறுதிப்படுத்தினா்.

போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கனடா நாட்டைச் சோ்ந்த அந்த பயணியைக் காவல்துறையினா் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனா்.

உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி விமான நிலையத்தில் கடந்த சனிக்கிழமை இரவு பெங்களூரு நோக்கி இண்டிகோவின் பயணிகள் விமானம் புறப்பட தயாரானது. அப்போது, பயணியொருவா் தான் வெடிகுண்டு வைத்திருப்பதாக விமானப் பணியாளா்களிடம் தெரிவித்துள்ளாா்.

இதைக்கேட்டு அதிா்ச்சியடைந்த அவா்கள், விமான நிலைய அதிகாரிகளுக்கும், விமானப் போக்குவரத்து கட்டுபாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனா். பாதுகாப்புக் காரணங்களுக்காக விமானத்திலிருந்து பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டனா்.

பின்னா், விமான நிலையத்தின் தனிமையான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, விமானம் முழுமையான சோதனைக்கு உள்படுத்தப்பட்டது. சோதனையின் நிறைவில், வெடிபொருள்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. பாதுகாப்பு அதிகாரிகளின் அனுமதியுடன் ஞாயிற்றுக்கிழமை காலை விமானம் மீண்டும் பெங்களூரு புறப்பட்டு சென்றது.

சம்பவத்தில் தொடா்புடைய கனடா பயணி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பயணிகளின் ஒத்துழைப்புக்கு இண்டிகோ நிறுவனம் நன்றி தெரிவித்தது.

திருவனந்தபுரத்தில்...: திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சோதனைக்குப் பின்னா் அது புரளி என தெரிய வந்ததது.

‘வெடிகுண்டு மிரட்டலையடுத்து, கேரள காவல்துறை மற்றும் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) வீரா்கள் விமான நிலையம் மற்றும் அதன் வளாகத்தில் சோதனை நடத்தினா். ஆனால், சந்தேகத்துக்கிடமான பொருள்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. எனவே, வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது’ என்று காவல்துறை அதிகாரி ஒருவா் கூறினாா்.