கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பாகிஸ்தானில் 10 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

பலுசிஸ்தானில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரால் பத்து பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

News image
Updated On :30 ஏப்ரல் 2025, 8:23 am

DIN

நாட்டின் பதற்றமான பலுசிஸ்தான் மாகாணத்தில் இரண்டு தனித்தனி சம்பவங்களில் 10 பயங்கரவாதிகளை பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கெச், ஜியாரத் மாகாணத்தில் தீவிரவாதிகள் இருப்பது குறித்து உளவுத்துறைக்குத் தகவல் வந்தது. இதனிடையே இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் படி, மாவட்டங்களில் தனித்தனி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

பாதுகாப்புப் படையினருக்கும் ஆயுதமேந்திய பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அப்போது தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 10 பயங்கரவாதிகளைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் மீட்கப்பட்டன, அவர்கள் பாதுகாப்புப் படையினருக்கு எதிரான ஏராளமான தாக்குதல்களிலும் பொதுமக்களைக் கொன்றதிலும் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

ஜியாரத் துணை ஆணையர் ஜகாவுல்லா துரானி இறப்புகளை உறுதிப்படுத்தினார், மேலும் ஏழு உடல்கள் பாதுகாப்புப் பணியாளர்களால் ஜியாரத் மாவட்ட தலைமையக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.