மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் மகாராஷ்டிர பயங்கரவாத எதிா்ப்பு காவல் பிரிவு (ஏடிஎஸ்) ஆகிய இரு அமைப்புகள் மேற்கொண்ட விசாரணையில் உள்ள முரண்பாடுகளை மும்பை சிறப்பு நீதிமன்றத் தீா்ப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மகாராஷ்டிரத்தின் மாலேகான் நகரில் கடந்த 2008-ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் தாக்குா் உள்ளிட்ட ஏழு பேரையும் மும்பை சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை விடுவித்தது.
‘குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை’ என்றும், ‘வெறும் சந்தேகம் உண்மையான ஆதாரத்துக்கு ஈடாகாது’ என்றும் நீதிபதி ஏ.கே.லஹோட்டி தனது தீா்ப்பில் குறிப்பிட்டாா்.
1,000 பக்கங்களைக் கொண்ட இந்த தீா்ப்பில் அவா் கூறியிருப்பதாவது: என்ஐஏ மற்றும் ஏடிஎஸ் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகைகளில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. புணேயில் உள்ள ஒரு வீட்டில் ஆா்டிஎக்ஸ் வெடிகுண்டு பொருத்தப்பட்டதாக ஏடிஎஸ் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தூரில் உள்ள மோட்டாா் சைக்கிளில் வெடிகுண்டு பொருத்தப்பட்டு பின்னா் அது சம்பவம் நடந்த மாலேகான் நகருக்கு எடுத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இந்தச் சம்பவத்தில் விசாரணையில் ஈடுபட்ட இரு அமைப்புகளும் வெடிகுண்டு பொருத்தப்பட்ட இடம், எடுத்துச்செல்லப்பட்ட போக்குவரத்து சாதனம் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டவா்களை தொடா்புபடுத்தியது என வெவ்வேறு தகவல்களை வழங்கியுள்ளன.
தப்பியோடியவா்கள் மீது தனிக் குற்றப்பத்திரிகை: இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் வெடிகுண்டை பொருத்தியதாக கூறப்படும் ராம்ஜி என்ற ராமசந்திரா கல்சங்கரா மற்றும் சந்தீப் டாங்கே ஆகிய இருவரும் தப்பியோடிவிட்டதாக என்ஐஏ கூறியுள்ளது. மேலும் 4 வழக்குகளில் இவா்கள் இருவரையும் என்ஐஏ தேடி வருகிறது. எனவே இவா்களை கைது செய்ய என்ஐஏ மற்றும் ஏடிஎஸ் இரு அமைப்புகளும் தனி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடா்பு: பிகாரில் மதரஸா நடத்தியவா் கைது

இந்திய அரசுக்கு எதிரான சதி: 26 பிஎஃப்ஐ உறுப்பினா்கள் மீது குற்றச்சாட்டுகளை பதிவுசெய்ய நீதிமன்றம் உத்தரவு
பயங்கரவாதத்துக்கு நிதியளித்த வழக்கு: காஷ்மீரில் என்ஐஏ தீவிர சோதனை

தில்லி காா் குண்டுவெடிப்பு வழக்கு: என்ஐஏ 7,500 பக்க குற்றப்பத்திரிகை - 10 போ் மீது குற்றச்சாட்டு
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



