
காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, தான் ராஜாவாக ஒருபோதும் விரும்பவில்லை என்றும், அந்த முறையையே ஒட்டுமொத்தமாக எதிர்க்கிறேன் என்றும் கூறியிருக்கிறார்.
புது தில்லியில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று தொடங்கிய சட்ட மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார் ராகுல் காந்தி. மாநாட்டின் ஒரு பகுதியாக, அரசியலமைப்பு சவால்கள்: முன்னெடுப்புகள் மற்றும் பாதைகள் என்ற தலைப்பில் ராகுல் காந்தி பங்கேற்று தனது உரையைத் தொடங்கியபோது, அங்கிருந்த பார்வையாளர்கள், இந்த நாட்டின் ராஜா எப்படி இருக்க வேண்டும்? ராகுல் காந்தி மாதிரி இருக்க வேண்டும் என்று குரல் எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, வேண்டாம் நண்பர்களே, நான் ஒரு போதும் ராஜா இல்லை. ராஜா ஆக வேண்டும் என்ற விருப்பம் துளியும் இல்லை. ராஜா என்ற முறைக்கு நான் எதிரானவன். ராஜா என்ற முறையை நான் ஒட்டுமொத்தமாக எதிர்க்கிறேன் என்று கூறினார்.
முன்னதாக, ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை குற்றம்சாட்டிப் பேசுகையில், இந்த நாட்டின் ராஜா போல செயல்படுவதாகவும், மக்களின் குரல்களைக் கேட்பதில்லை என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.