ஆபரேஷன் அகால் நடவடிக்கையில் ராணுவப் படை
ஆபரேஷன் அகால் நடவடிக்கையில் ராணுவப் படைPTI

ஆபரேஷன் அகால்: ஜம்மு - காஷ்மீரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொலை!

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி...
Published on

இந்திய ராணுவத்தினர் நடத்திய ஆபரேஷன் அகால் நடவடிக்கையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

உளவுத் துறை தகவலைத் தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இந்திய ராணுவம் தலைமையில் நேற்றிரவு முதல் பயங்கரவாதிகளை தேடும் பணி நடைபெற்று வந்தது.

இந்த நடவடிக்கைக்கு ஆபரேஷன் அகால் எனப் பெயரிடப்பட்ட நிலையில், ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவத்தின் சினார் கார்ப்ஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

இரவு முழுவதும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற நிலையில், ஆபரேஷன் அகால் நடவடிக்கை தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 7 நாள்களில் இந்திய ராணுவத்தால் மேற்கொள்ளப்படும் மூன்றாவது பெரிய ஆபரேஷன் இது. முன்னதாக, திங்கள்கிழமை நடத்தப்பட்ட ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கையில், பஹல்காம் தாக்குதலுக்கு தொடர்புடைய மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

தொடர்ந்து, பூஞ்ச் மாவட்டத்தில் புதன்கிழமை நடத்தப்பட்ட ஆபரேஷன் சிவசக்தி நடவடிக்கையில், சர்வதேச எல்லையில் ஊடுருவ முயன்ற இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்த நடவடிக்கைகளின்போது, பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

Summary

A terrorist has been killed in Operation Akhal conducted by the Indian Army.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com