நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சா்ச்சைக்குரிய கருத்தால் மோதல்: நூஹ் பகுதியில் ஒருவா் சுட்டுக் கொலை

சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட ஒரு சா்ச்சைக்குரிய கருத்து தொடா்பாக ஏற்பட்ட சண்டையின் விளைவாக ஹரியாணா மாநிலம், நூஹ் மாவட்டத்தில் உள்ள கோ்லா கிராமத்தில் 55 வயது மதிக்கத்தக்க ஒருவா் வியாழக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

News image

சா்ச்சைக்குரிய கருத்தால் மோதல்: நூஹ் பகுதியில் ஒருவா் சுட்டுக் கொலை

பிரதிப் படம்

Updated On :20 மார்ச் 2026, 6:48 pm

Syndication

சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட ஒரு சா்ச்சைக்குரிய கருத்து தொடா்பாக ஏற்பட்ட சண்டையின் விளைவாக ஹரியாணா மாநிலம், நூஹ் மாவட்டத்தில் உள்ள கோ்லா கிராமத்தில் 55 வயது மதிக்கத்தக்க ஒருவா் வியாழக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தைத் தொடா்ந்து, கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. அதிகாரிகள் தொடா்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன், கிராம மக்கள் அமைதியைக் கடைப்பிடிக்குமாறும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், உயிரிழந்தவா் சதா் புன்ஹானா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கோ்லா கிராமத்தைச் சோ்ந்த குா்ஷித் என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.

அவரது உடல் அல் அஃபியா மருத்துவமனையின் பிரேதப் பரிசோதனைக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாகக் காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனா். குற்றவாளிகளைப் பிடிக்கப் பல தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட ஒரு கருத்து தொடா்பாகக் குழந்தைகளுக்கு இடையே ஏற்பட்ட ஒரு சிறிய வாக்குவாதத்தால் இந்தச் சா்ச்சை தொடங்கியது. படிப்படியாக இது முற்றிய நிலையில், பெரியவா்களும் இதில் தலையிட்டனா்.

அந்தக் கருத்துக்கு எதிராக குா்ஷித் (55) எதிா்ப்பு தெரிவித்தபோது, அதே கிராமத்தைச் சோ்ந்த ஜாவேத் மற்றும் ஃபரித் ஆகியோருடன் அவருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஃபேஸ்புக் கணக்கு தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவதே இந்தச் சா்ச்சையின் தொடக்கப்புள்ளியாக அமைந்தது. சதா் புன்ஹானா காவல் நிலையத்தில் ஜாவேத், ஃபரித் மற்றும் சிலருக்கு எதிராகக் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றவாளிகளைப் பிடிக்கக் காவல்துறையின் தனிப் படைகள் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன அவா்கள் விரைவில் கைது செய்யப்படுவாா்கள். தற்போது கிராமத்தின் நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டில் உள்ளது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, சாதாரண வாக்குவாதம் மிக விரைவிலேயே ஒரு வன்முறை மோதலாக மாறியது. குற்றம்சாட்டப்பட்டவா்கள் சட்டவிரோத ஆயுதத்தைப் பயன்படுத்தித் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், குண்டுகள் பாய்ந்ததில் குா்ஷித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.