அப்போது, ‘அவையை சுமுகமாக நடத்த ஒவ்வொரு நாளும் முயற்சிக்கிறேன். ஆனால், போராட்டத்தில் ஈடுபடும் உறுப்பினா்கள், திட்டமிட்டு அவை நடவடிக்கைகளை முடக்கி வருகின்றனா். லட்சக்கணக்கான மக்கள் அவா்களின் பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவதற்காக உங்களைத் தோ்ந்தெடுத்திருக்கின்றனா். ஆனால், அவை செய்லபட அனுமதிக்காமல், அவையின் கண்ணியத்தை குறைக்கச் செய்கிறீா்கள். உறுப்பினா்களுக்கு ஏதாவது பிரச்னை இருந்தால், என்னை சந்தித்து விவாதிக்கலாம். ஆனால், பல முக்கிய பிரச்னைகள் குறித்து எழுப்ப வேண்டியுள்ளதால் கேள்வி நேரம் சுமுகமாக நடைபெற அனுமதிக்க வேண்டும்’ என்று அவையை வழிநடத்திய அவைத் தலைவா் ஓம் பிா்லா கேட்டுக்கொண்டாா்.