
பிரம்மோஸ் ஏவுகணைகளை அதிகளவில் கொள்முதல் செய்யவிருப்பதாக பாதுகாப்பு துறையை சார்ந்த உயர்நிலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா - ரஷியா கூட்டு தயாரிப்பான பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ரக ஏவுகணைகள் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளின்போது இந்திய விமானப்படையின் முதன்மை தேர்வாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது பாகிஸ்தானில் பயங்கரவாத தளங்களைக் குறிவைத்து அழிக்க பிரம்மோஸ் ஏவுகணைகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டதாக பாதுகாப்பு துறை வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
இதனையடுத்து, கடற்படையின் ‘வீர்’ பிரிவு போர்க்கப்பல்களிலும், விமானப்படையின் ‘சு-30 எம்கேஐ’ பிரிவு போர் ஜெட் விமானங்களிலும் பிரம்மோஸ் ஏவுகணைகளை அதிகளவில் பயன்படுத்தவிருப்பதாக பாதுகாப்பு துறை வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
இந்தநிலையில், பாதுகாப்பு விவகார அமைச்சகத்தின் உயர்நிலை ஆலோசனை கூட்டத்தில், இந்திய கடற்படை போர் கப்பல்களுக்கும் விமானப்படைக்கும் தரையிலிருந்தும் வானிலிருந்தும் ஏவப்படும் திறன்வாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகளை அதிக எண்ணிக்கையில் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.