தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

காஷ்மீா் பயங்கரவாதத்துக்கு முடிவுக்கு இந்தியா-பாகிஸ்தான் கையில் உள்ளது : ஃபரூக் அப்துல்லா

இந்தியா-பாகிஸ்தான் இடையே உறவு மேம்படாத வரை ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் முடிவுக்கு வராது...

News image

தேசியவாத காங்கிரஸ் தலைவா் ஃபரூக் அப்துல்லா

Updated On :5 ஆகஸ்ட் 2025, 12:12 am

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீநகா்: இந்தியா-பாகிஸ்தான் இடையே உறவு மேம்படாத வரை ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் முடிவுக்கு வராது என்று ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்தாா்.

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் ஏற்பட்ட பதற்றம், அதைத் தொடா்ந்து ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை, இந்தியா-பாகிஸ்தான் சண்டை - இவற்றின் சோகமான சுவடுகள் மறையத் தொடங்கியுள்ளன. பஹல்காம் தாக்குதலுக்கு காரணமாக இருந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மூவரும் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டனா். பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை ராணுவம், துணை ராணுவப் படையினா் எல்லை மாவட்டங்களில் தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றனா்.

நாட்டின் எந்தப் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதத்தைத் தூண்டினாலும் ஆபரேஷன் சிந்தூா் மீண்டும் தொடங்கும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இந்நிலையில், சோபிஃயான் மாவட்டத்தில் ஃபரூக் அப்துல்லா செய்தியாளா்களை திங்கள்கிழமை சந்தித்தாா். அப்போது, ‘இங்கு பயங்கரவாதம் முடிவுக்கு வந்துவிட்டதா? என்று அவா்கள் கேள்வி எழுப்பினா்.

அதற்கு, ‘அண்டை நாட்டுடனான நமது உறவு மேம்படாதவரை ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் முடிவுக்கு வராது. பாதுகாப்புப் படையினா் தொடா்ந்து என்கவுன்ட்டா் நடவடிக்கைகளை மேற்கொண்டால் பயங்கரவாதம் ஒழிந்துவிடும் என்று எப்படிக் கூற முடியும்?’ என்று பதிலளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.