இஸ்ரேலின் புதிய பிரதமர் காடி ஐசென்கோட்! ஆட்சி அமைக்க அதிபர் அழைப்பு! டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!நெருக்கடி நிலையை இந்திரா காந்தி அமல்படுத்தியது தவறு! சோனியா காந்திஇன்று டெல்டாவில் பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கைதீபாவளி பட்டாசு விபத்துகள்: 6 நிமிஷங்களுக்குள் சென்றடைய தயாராகும் தீயணைப்புத் துறைஅறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சிகள்: நீதி ஆயோக் மதிப்பீட்டுப் பட்டியலில் தமிழகம் முதலிடம்ஜெம் வீரமணி வழக்கு: விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

ஆபரேஷன் சிந்தூர்: ஹர ஹர மகாதேவ் முழக்கத்துடன் மோடியை வாழ்த்திய எம்பிக்கள்!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்காக மோடியை எம்பிக்கள் பாராட்டியது பற்றி...

ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்காக மோடியை பாராட்டிய எம்பிக்கள் - PTI

Updated On :

தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில், ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு மாலை அணிவித்து எம்பிக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் கூட்டம் இன்று(ஆக. 5) காலை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி எம்பிக்களும் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில், ஆபரேஷன் சிந்தூர், ஆபரேஷன் மகாதேவ் உள்ளிட்ட ராணுவ நடவடிக்கைகளின் வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு எம்பிக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மோடிக்கு மாலை அணிவித்தபோது, எம்பிக்கள் அனைவரும் ஹர ஹர மகாதேவ் என்று முழக்கம் எழுப்பினர்.

மேலும், பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும், பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இந்திய பாதுகாப்புப் படையின் துணிச்சலைப் பாராட்டியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Summary

Operation Sindoor: MPs congratulate Modi with slogans of Hara Hara Mahadev

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.