
பஞ்சாபில் எல்பிஜி டேங்கர் லாரி விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.
பஞ்சாப் மாநிலம், மண்டியாலா அடா அருகே ஹோஷியார்பூர்-ஜலந்தர் சாலையில் எல்பிஜி டேங்கர் லாரி மீது மற்றொரு வாகனம் வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் மோதியது. இதில் டேங்கர் லாரி வெடித்துச் சிதறியதில் இரண்டு பேர் பலியாகினர். மேலும் 21 பேர் காயமடைந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் சனிக்கிழமை போலீஸார் தெரிவித்தனர். தீ வேகமாக பரவியதால் அருகிலுள்ள சுமார் 15 கடைகள் மற்றும் 4 முதல் 5 வீடுகள் தீக்கிரையாகின. உடனடியாக தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டன. இது குறித்து வழக்குப் பதிவு செய்து பஞ்சாப் போலீஸழர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 7 உயர்ந்துள்ளது என்று போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். இதனிடையே டேங்கர் லாரி விபத்தில் பலியானோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் என்றும் முதல்வர் பகவந்த் மான் சனிக்கிழமை அறிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.