ஜவுளி ஏற்றுமதிக்கு 40 நாடுகளில் வாய்ப்பு: வர்த்தக அமைச்சகம்

மாற்று ஏற்றுமதிக்கான வாய்ப்புகளைத் தேடும் பணியில் வர்த்தக அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on
Updated on
1 min read

இந்திய ஏற்றுமதிப் பொருள்கள் மீதான அமெரிக்காவின் கூடுதலாக அறிவித்த 25 சதவீத வரி புதன்கிழமை அமலுக்கு வந்த நிலையில் மாற்று ஏற்றுமதிக்கான வாய்ப்புகளைத் தேடும் பணியில் வர்த்தக அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

குறிப்பாக இந்திய ஜவுளியை ஏற்றுமதி செய்ய 40 நாடுகளை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அந்த நாடுகள் ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஓசியானியா கண்டத்தில் இருப்பதாகவும், அவை உலகளாவிய ஜவுளி மற்றும் ஆடைக்கான தேவையில் நான்கில் மூன்று பங்கை கொண்டிருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் கூறின.

இந்தியப் பொருள்கள் மீது பதிலடி வரி என்ற பெயரில் அமெரிக்க அதிபர் 25 சதவீத வரி விதித்தார். அடுத்தகட்டமாக ரஷியாவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தவில்லை என்றுகூறி கூடுதலாக 25 சதவீத வரியை அறிவித்தார். இந்த கூடுதல் வரி புதன்கிழமை அமலுக்கு வந்தது.

இது இந்தியாவில் உற்பத்தி, ஏற்றுமதித் துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. முக்கியமாக ஜவுளி தொழில், இறால் ஏற்றுமதி, காலணி உள்ளிட்ட தோல் பொருள்கள், ரசாயனங்கள், சில மின்னணு மற்றும் இயந்திர சாதனங்கள் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது. இது இந்தியாவில் உற்பத்தியாளர்களையும், இத்துறையில் உள்ள தொழிலாளர்களையும் பாதிக்கும் என்று தெரிகிறது.

இந்நிலையில், இந்தப் பிரச்னையில் இருந்து மீள்வதற்கான வாய்ப்புகளை ஆலோசிக்க மத்திய வர்க்க அமைச்சகம் பல்வேறு துறையினருடன் தொடர் ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதில் இதுவரை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து வந்த பொருள்களை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது.

இதற்காக ரசாயனம், நவரத்தினங்கள், நகை உற்பத்தி, தோல் பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்களுடன் மத்திய வர்த்தக அமைச்சகம் விரைவில் ஆலோசிக்க உள்ளது. அப்போது ஏற்றுமதிக்கான மாற்று வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவது, உள்நாட்டுச் சந்தையை விரிவுபடுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

கடந்த 2021-22-ஆம் ஆண்டு முதல் இந்தியாவிடம் இருந்து அதிக மதிப்பாலான பொருள்களை இறக்குமதி செய்யும் நாடாக அமெரிக்கா உள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவிடம் இருந்து இறக்குமதி செய்யும் பொருள்களைவிட சுமார் இரண்டு மடங்கு அளவுக்கு மதிப்புக்கு அந்நாட்டுக்கு இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com