பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது பற்றி...

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா - SANSAD

Published On :

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில், இரண்டாவது நாளாக மக்களவை முடங்கியுள்ளது.

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. நேற்று காலை கூட்டம் தொடங்கியவுடன் தமிழகம், மேற்கு வங்கம் உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என எதிா்க்கட்சி உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா். அதற்கு அவைத் தலைவா் அனுமதி மறுத்தாா்.

இதனால் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் அவை நடவடிக்கைகள் முடங்கின. அமளிக்கு இடையே மணிப்பூா் ஜிஎஸ்டி மசோதா மட்டும் தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் பெறப்பட்டது.

தொடர்ந்து, இரண்டாவது நாளாக இன்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியவுடன், எஸ்ஐஆா் குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் மீண்டும் கோரிக்கை வைத்தனர்.

ஆனால், அவைத் தலைவர் மறுப்பு தெரிவித்ததால், அவையின் மையப் பகுதியில் கூடிய எதிா்க்கட்சி எம்.பி.க்கள், விவாதத்துக்கு அனுமதிக்கக் கோரியும் எஸ்ஐஆா்-க்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடியும் அமளியில் ஈடுபட்டதால், முதலில் பகல் 12 வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்ந்து எதிர்க்கட்சியினரின் அமளியால் பிற்பகல் 2 மணி வரையும், பின்னர் நாள் முழுவதும் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மக்களவை மீண்டும் புதன்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, காங்கிரஸ், திமுக உள்பட அனைத்துக் கட்சிகளின் அவைத் தலைவர்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.

Summary

Lok Sabha adjourned for the day

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.