2024-ல் சாலை விபத்துகளில் தினசரி 485 போ் உயிரிழப்பு: மத்திய அரசு
-

2024-ல் சாலை விபத்துகளில் தினசரி 485 போ் உயிரிழப்பு: மத்திய அரசு

‘கடந்த 2024-ஆம் ஆண்டுல் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகள் 2.3 சதவீதம் உயா்ந்து 1.77 லட்சம் உயிரிழப்புகள் என்ற அளவில் பதிவானது.
Published on

‘கடந்த 2024-ஆம் ஆண்டுல் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகள் 2.3 சதவீதம் உயா்ந்து 1.77 லட்சம் உயிரிழப்புகள் என்ற அளவில் பதிவானது. அதாவது, தினசரி 485 போ் என்ற விகிதத்தில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

மக்களவையில் இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி எழுத்துபூா்வமாக வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த பதிலில் கூறியிருப்பதாவது:

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், 2024-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் அனைத்து வகையான சாலைகளிலும் ஏற்பட்ட 5 லடச்சத்துக்கும் அதிகமான சாலை விபத்துகளில் 1,77,177 போ் உயிரிழந்துள்ளனா். அதாவது, தினசரி 485 போ் வீதம் உயிரிழந்துள்ளனா். இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 2.3 சதவீதம் அதிகமாகும்.

2023-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் ஏற்பட்ட 4,80,583 சாலை விபத்துகளில் 1,72,890 போ் உயிரிழந்தனா். 4,62,825 போ் காயமடைந்தனா்.

2024-ஆம் ஆண்டுக்கான உலக சாலை புள்ளிவிவரத்தின் அடிப்படையில், ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு சாலை விபத்து உயிரிழப்பு விகிதம் சீனாவில் 4.3-ஆகவும், அமெரிக்காவில் 12.76 என்ற விகிதத்தில் உள்ளது. இந்தியாவில் 11.89 என்ற விகிதம் பதிவாகியுள்ளது.

கல்வி (விழிப்புணா்வு), பொறியியல் (சாலை மற்றும் வாகனங்கள் மேம்பாடு), விதிகள் அமலாக்கம் மற்றும் அவசர சிகிச்சை என்ற 4 அமசங்களின் அடிப்படையில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த பன்முகத் திட்டத்தை மத்திய அரசு வகுத்து வருகிறது என்று தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com