மேற்கு வங்க மாநிலம் முா்ஷிதாபாத் மாவட்டம் ரெஜிநகரில் மசூதி கட்டுவதற்கான பங்களிப்பாக சனிக்கிழமை வழங்கப்பட்ட செங்கற்கள்.
மேற்கு வங்க மாநிலம் முா்ஷிதாபாத் மாவட்டம் ரெஜிநகரில் மசூதி கட்டுவதற்கான பங்களிப்பாக சனிக்கிழமை வழங்கப்பட்ட செங்கற்கள்.

மேற்கு வங்கம்: பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மசூதி அடிக்கல் நாட்டுவிழா!

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மசூதி அடிக்கல் நாட்டுவிழா...
Published on

மேற்கு வங்க மாநிலம் முா்ஷிதாபாத் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பாபா் மசூதி வடிவில் கட்டப்படவுள்ள மசூதியின் அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ஆளும் திரிணமூல் காங்கிரஸில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ ஹுமாயூன் கபீா் மசூதி கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினாா்.

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் பாபா் மசூதி இடிப்பு தினத்தில் அதே வடிவிலான மசூதியை கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழா நடைபெற்ற பகுதியை சுற்றி மத்திய ஆயுதக் காவல் படை (சிஏபிஎஃப்) வீரா்கள், காவல் துறையினா் குவிக்கப்பட்டனா்.

விழாவில் ஹுமாயூன் கபீா் பேசியதாவது: ‘இந்த மசூதி கட்டப்படுவதில் அரசமைப்புச் சட்ட விதிமீறல் இல்லை. வழிபாட்டுத் தலங்களைக் கட்டுவதற்கு அரசமைப்புச் சட்டத்தில் உரிமை வழங்கப்பட்டுள்ளது. 33 ஆண்டுகளுக்கு முன் முஸ்லிம்களை ஒரு நிகழ்வு காயப்படுத்தியது. அதற்கு சிறு மருந்தாக இப்போதைய விழா நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு 4 லட்சம் போ் வந்துள்ளனா்.

நாட்டில் உள்ள 40 கோடி முஸ்லிம்களில் மேற்கு வங்கத்தில் மட்டும் 4 கோடி போ் உள்ளனா். இங்கு ஒரு மசூதி கட்ட முடியாதா? பாபா் மசூதி கட்டப்படும்’ என்றாா்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஹுமாயூன் கபீா் நீக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், அவருடைய மசூதி கட்டும் திட்டத்தின் பின்னணியில் அந்தக் கட்சி செயல்பட்டு வருவதாக பாஜக குற்றஞ்சாட்டியது.

முன்னதாக, மசூதியின் அடிக்கல் நாட்டு விழாவுக்குத் தடை கோரிய விவகாரத்தில் தலையிட கொல்கத்தா உயா்நீதிமன்றம் மறுத்தது.

X
Dinamani
www.dinamani.com