

குடியரசுத் துணைத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்த பிறகு தங்கர் ராஜஸ்தான் மாநிலத்திற்கு செல்ல உள்ளார்.
முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கரின் அத்தை சாந்தி தேவி ஞாயிற்றுக்கிழமை காலமானார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவரது இறுதிச் சடங்கு ராஜஸ்தானின் ஜுன்ஜுனுவில் உள்ள ஜோரியாவில் பிற்பகலில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க ஜகதீப் தன்கர் ராஜஸ்தான் செல்ல உள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்த பிறகு தங்கர் ராஜஸ்தான் மாநிலத்திற்கு செல்வது இதுவே முதல்முறை ஆகும்.
முன்னதாக கடந்த ஜூலை 21, நள்ளிரவில் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், தன் பதவியை திடீரென ராஜிநாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.