

கூட்டணித் தலைவராக இருக்க ராகுல் காந்தி தகுதியற்றவர் என்ற எண்ணம் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களிடையே நிலவுவதாக பாஜக விமர்சித்துள்ளது.
பிகார் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இந்தியா கூட்டணியின் நிலைமை மோசமாக உள்ளதாகவும், விரைவில் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ஐசியு) செல்லும் அபாயம் உள்ளதாகவும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா கூறியதைத் தொடர்ந்து பாஜக இவ்வாறு விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பந்தாரி பேசியதாவது,
ஜம்மு - காஷ்மீர் முதல்வர் கூறியது, ராகுல் காந்தி தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு விழுந்த மிகப்பெரிய அடி. இந்தியா கூட்டணிக்கு தலைமை வகிக்க ராகுல் காந்தி தகுதியற்றவர் என்று ஒமர் அப்துல்லா உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களே கருதுகின்றனர்.
ராகுல் காந்தி தொடர்ந்து வாக்குத் திருட்டு, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் என எதைப் பற்றி பேசினாலும், தங்கள் கூட்டணி வெற்றி பெறாததற்கு ராகுல் காந்தியே காரணம் எனக் கருதுகின்றனர். ஒமர் அப்துல்லா, ஹேமந்த் சோரன் என அனைவரின் கருத்தும் இதுவாகத்தான் உள்ளது.
இன்று அது உறுதியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியைத் தவிர, இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் ராகுல் காந்தியை அரசியல் தோல்வியாகவே பார்க்கின்றனர் எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | மேக் இன் இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.