சோனியா காந்தி பிறந்த நாள்: முதல்வர், பிரதமர் வாழ்த்து!

சோனியா காந்தி பிறந்த நாளையொட்டி முதல்வர், பிரதமரின் வாழ்த்துச் செய்தி.
சோனியா காந்தி
சோனியா காந்திகோப்புப்படம்
Updated on
1 min read

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சோனியா காந்தியின் பிறந்த நாளை, நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இது குறித்து, பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”சோனியா காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய வாழ்த்துச் செய்தியில், “காங்கிரஸ் பேரியக்கத்தின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

தியாகம், தன்னலமற்ற பொதுவாழ்வுப் பயணம், மதச்சார்பின்மை மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களை நிலைநாட்டும் உறுதியைப் பிரதிபலிப்பதாக அவரது வாழ்க்கை அமைந்துள்ளது.

முற்போக்கான, அனைவருக்குமான இந்தியாவை நோக்கிய நமது கூட்டு முயற்சிகளுக்கு அவரது கொள்கைப் பாதையும் வழிகாட்டுதலும் தொடர்ந்து வலுவூட்ட வேண்டும் என விழைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Greetings from the Chief Minister and Prime Minister Sonia Gandhi's birthday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com