கர்நாடகத்தின் முதல்வராக, வரும் ஜன.6 ஆம் தேதி டி.கே. சிவக்குமார் பதவியேற்பார் என ஆளும் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் ஹெச்.ஏ. இக்பால் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகின்றது.
இதையடுத்து, காங்கிரஸ் ஆட்சி அமைந்து இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதால், முதல்வர் பதவியில் மாற்றம் ஏற்படும் எனும் கருத்து அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுப்பொருளாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் முதல்வராகப் பதவியேற்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கர்நாடகத்தின் ராமநகரா சட்டப்பேரவை உறுப்பினர் ஹெச்.ஏ. இக்பால் ஹுசைன், வரும் ஜன.6 ஆம் தேதி டி.கே. சிவக்குமார் முதல்வராகப் பதவியேற்க வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளார்.
இதுகுறித்து, அவர் பேசியதாவது:
“வரும் ஜன.6 ஆம் தேதி டி.கே. சிவக்குமார் முதல்வராகப் பதவியேற்க 99 சதவிகிதம் வாய்ப்புள்ளது. எல்லாரும் இதைதான் கூறுகின்றனர். வரும் ஜன.6 அல்லது ஜன.9 இவ்விரண்டில் ஏதோவொரு தேதியில் இது நடைபெறும்” எனப் பேசியுள்ளார்.
முன்னதாக, முதல்வர் பதவியில் எந்தவொரு மாற்றமும் இல்லை எனவும், காங்கிரஸ் கட்சி தலைவர்களின் முடிவுகளுக்கு நாங்கள் கட்டுப்படுவோம் எனவும், கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றி! பிரதமர் மோடி நன்றி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.