

இந்தியா மீதான வரியை நீக்குமாறு அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் மசோதா அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் வட கரோலினாவின் காங்கிரஸ் பிரதிநிதிகள் பேசுகையில், "வர்த்தகம், முதலீடு, நல்லுறவு ஆகியவற்றால் இந்தியாவுடன் வட கரோலினாவின் பொருளாதாரம் ஆழமாகப் பதிந்துள்ளது.
வட கரோலினாவில் இந்திய நிறுவங்கள் ஒரு பில்லியன் டாலர்களுக்குமேல் முதலீடு செய்துள்ளன. மேலும், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன. அதேவேளையில், இந்தியாவுக்கு நூற்றுக்கும் அதிகமான மில்லியன் டாலர்கள் பொருள்களை வட கரோலினா ஏற்றுமதி செய்கிறது. இந்தியா மீதான வரி என்பது, டெக்ஸான்கள் மீதான வரியாகும்.
இந்த வரிகள், அமெரிக்காவின் நலன்கள், பாதுகாப்பை மேம்படுத்துவதற்குப் பதிலாக விநியோகச் சங்கிலிகளைச் சீர்குலைக்கின்றன. அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு தீங்கு விளைவிப்பது மட்டுமின்றி, நுகர்வோருக்கான செலவுகளையும் அதிகரிக்கின்றன" என்று வலியுறுத்தினர்.
இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 50 சதவிகித ஆகஸ்ட் மாதத்தில் வரியை விதித்தது, இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், மறுஉத்தரவு வரும்வரையில் இந்தியாவுடன் வர்த்தகம் கிடையாது என்றும் டிரம்ப் அறிவித்தார். இந்த நிலையில், இந்தியாவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தொடர்ந்து முயற்சித்து வரும்நிலையில், விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: மடூரோவுக்கு எதிராக டிரம்ப் புதிய பொருளாதாரத் தடைகள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.