

ராகுலின் ஜெர்மனி பயணம்: ஜெர்மனிக்குப் பயணம் மேற்கொள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அங்குள்ள கார் ஆலையை பார்வையிட்டார்.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், கூட்டத்தொடர் நிறைவடையாத நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஜெர்மனிக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதை பாஜக தரப்பில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக ராகுல் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில்,
ஜெர்மனியின் உள்ள ஆடம்பர கார் நிறுவனமான பிஎம்டபிள்யூ கார் காட்சியகம் மற்றும் ஆலையைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. உலகத்தரம் வாய்ந்த உற்பத்தியை மிக அருகில் காண நம்பமுடியாத அனுபவமாக இருந்தது.
பிஎம்டபிள்யூ நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட டிவிஎஸ்-இன் 450சிசி இருசக்கரங்களைப் பார்த்ததும் ஒரு சிறப்பம்சமாகும். இந்தியப் பொறியியலைக் காட்சிப்படுத்துவதைப் பார்ப்பது பெருமையான தருணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வலுவான பொருளாதாரங்களுக்கு உற்பத்தித் துறைதான் முதுகெலும்பு. துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவில் உற்பத்தித் துறை சரிந்து வருகிறது. நாம் வளர்ச்சியை விரைவுபடுத்த, அதிகமாக உற்பத்தி செய்வதோடு, அர்த்தமுள்ள உற்பத்திச் சூழல் அமைப்புகளை உருவாக்க வேண்டும். பெருமளவில் உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
உலகம் முழுவதிலுமிருந்து 117 முற்போக்குக் கட்சிகளைக் கொண்ட ஒரு முக்கியக் குழுவான 'புரோகிரசிவ் அலையன்ஸ்' அமைப்பின் அழைப்பின்பேரில் காந்தி ஜெர்மனிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
தனது பயணத்தின்போது, ராகுல் காந்தி இந்திய வம்சாவளியினருடன் உரையாடுவதுடன், ஜெர்மன் அரசு அமைச்சர்களையும் சந்திப்பார்.
கடந்த ஆறு மாதங்களில் பிரிட்டன், மலேசியா, பிரேசில் போன்ற நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட ராகுலின் நான்காவது வெளிநாட்டுப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்படும்! எப்போது? எவ்வளவு?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.